தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இயக்குநரை கலாய்த்த பப்ளிசிட்டி நடிகை...! - கரு.பழனியப்பன்

இயக்குநர் கரு. பழனியப்பனை நடிகை கஸ்தூரி ட்விட்டரில் கலாய்த்து ட்வீட் செய்துள்ளார்.

நடிகை கஸ்தூரி

By

Published : Apr 10, 2019, 10:17 AM IST

திரைப்பட இயக்குநரும் சமூக ஆர்வலருமான கரு.பழனியப்பன் பொது நிகழ்ச்சிகளில் தீவிரமான அரசியல் கருத்துகளை எடுத்துவைப்பவர். இவர் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பரப்புரை செய்துவருகிறார்.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற 'கலைஞர்களின் சங்கமம்' கூட்டத்தில் அவர் பேசினார்.

அதில், ஆளும் அதிமுகவயும், பாஜகவையும் கடுமையாக தாக்கிப் பேசினார். தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி என்று சொன்னாலே மக்கள் சிரிக்கிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் பதவி இப்படி சிரிப்பாய் சிரிப்பது இதுவே முதல்முறை என்று கூறி நக்கலடித்து திமுகவிற்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்டார்.

கஸ்தூரி ட்விட்டர்

இந்நிலையில் தற்போது கரு.பழனியப்பன் குறித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், கடைசியில கரு பழனியப்பன் திமுகவா.... நான் கூட சிவப்பு சிந்தனையாளர், சு.வெக்கு மட்டும் பரப்புரை பண்ணுறாருனு முதல்ல நினைச்சேன்... ஆனா எல்லாருக்கும் பண்ணுறாரு போல. குடும்ப டிவில ஒரு ப்ரோக்ராம் பார்சல் ! என்று கூறி ட்வீட் செய்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details