தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைகளை அதிகமாக்க வேண்டும் - நடிகை கௌதமி - புற்று நோய்

புதுச்சேரி: புற்றுநோய் மருத்துவமனைகள் நம் நாட்டில் குறைவாக உள்ளதாகவும், அதனை அதிகப்படுத்துவதில் மத்திய மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் திரைப்பட நடிகை கௌதமி வலியுறுத்தியுள்ளார்.

gowthami
gowthami

By

Published : Feb 4, 2020, 7:41 PM IST

புதுச்சேரியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நடைபெற்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிக்கொடை வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற பின்னர், திரைப்பட நடிகை கவுதமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய மருத்துவ நிபுணர்கள் நம் நாட்டில் மிகக் குறைவாக இருக்கின்றனர். அதனை அரசாங்கம் நிவர்த்தி செய்ய வேண்டும். புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிக் கொடை என்பது மிகவும் தேவைப்படும் ஒன்றாகும். அம்முடியைக் கொண்டு அவர்களுக்கு ’விக்’ செய்து வழங்குவதால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவர். இதனை அனைவரும் செய்ய முன்வரவேண்டும் “ என்றார்.

புற்று நோய் சிகிச்சை மருத்துவமனைகளை அதிகமாக்க வேண்டும் - நடிகை கௌதமி

முன்னதாக, புற்று நோயாளிகளுக்கு முடிக் கொடை அளித்த 379 பேருக்கு பாராட்டு தெரிவித்து நடிகை கௌதமி சான்றிதழ் வழங்கினார்.

இதையும் படிங்க: 'விவசாயின்னா பிரச்னை இருக்கத்தான் செய்யும்' - நடிகர் அப்புகுட்டி

ABOUT THE AUTHOR

...view details