தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அவனுங்கள எங்ககிட்ட விடுங்க! - காயத்ரி ஆவேசம் - நடிகர் ஹரீஷ் கல்யாண் ட்வீட்

பாலியல் குற்றவாளிகளை பொதுமக்களிடம் விட்டுவிடுங்கள், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என தெலங்கானா பெண் மருத்துவர் கொலை தொடர்பாக நடிகை காயத்ரி ட்வீட் செய்துள்ளார்.

Actress Gayathrie
Actress Gayathrie

By

Published : Dec 4, 2019, 1:58 PM IST

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இளம் பெண் மருத்துவரை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக எரித்துக்கொன்ற சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் லாரி ஓட்டுநர், கிளீனர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.

இதனிடையே நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவருக்காக பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தியதோடு, குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

காயத்ரி - ஹரீஷ் கல்யாண்

இதுதொடர்பாக பல்வேறு திரையுலக பிரபலங்களும் குரல்கொடுத்துவரும் நிலையில், நடிகர் ஹரீஷ் கல்யாண், குற்றவாளிகளின் புகைப்படங்களைப் பதிவிட்டு 'கொளுத்தனும் இவனுங்கள' என பதிவிட்டிருந்தார்.

இதனை ரீ ட்வீட் செய்துள்ள நடிகை காயத்ரி, 'அவர்களை பொதுமக்களிடம் விட்டுவிடுங்கள், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்' என பதிவிட்டுள்ளார்.

நடிகை காயத்ரியின் இந்த ட்வீட் பதிவுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க... 'இருட்டு' எனக்கே பயமா இருந்துச்சு - நடிகை விமலா ராமன்

ABOUT THE AUTHOR

...view details