'கூடல்நகர்' மூலம் இயக்குநராக அறிமுகமான சீனு ராமசாமி 'தென்மேற்குப் பருவக்காற்று', 'தர்மதுரை' உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் 'இடம்பொருள் ஏவல்', 'மாமனிதன்' ஆகியவை வெளியீட்டுக்குத் தயார் நிலையில் உள்ளன.
இந்நிலையில் இவர் தற்போது ஜி.வி. பிரகாஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இப்படத்தை ஸ்கை மேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.