தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பெண் குழந்தைக்கு தாயானார் 90ஸ் ஹீரோயின் - திவ்யா உன்னி திரைப்படங்கள்

இரண்டாவது திருமணம் செய்துகொண்ட நடிகை திவ்யா உன்னி, பெண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.

Actress Divyaa Unni gave birth to girl baby
Actress Divyaa Unni

By

Published : Jan 30, 2020, 6:16 PM IST

சென்னை: தமிழ், மலையாளம் மொழிப் படங்களில் ஹீரோயினாக நடித்த திவ்யா உன்னி, பெண் குழந்தைக்கு தாயானார்.

குழந்தை நட்சத்திரமாக மலையாளப் படங்களில் நடித்து பின்னாளில் ஹீரோயினாக தோன்றியவர் திவ்யா உன்னி. மலையாளத்தில் 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 14ஆம் தேதி பெண் குழந்தையை பெற்றெடுத்த இவர், தற்போது தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில், ஜனவரி 14ஆம் தேதி தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஐஸ்வர்யா எனப் பெயரிடப்பட்டிருக்கும் தனது குழந்தைக்கு அனைவரும் ஆசிர்வாதம் வழங்குமாறு தெரிவித்துள்ளார்.

Divyaa Unni with her new born baby girl

தமிழில் பார்த்திபன் ஜோடியாக 'சபாஷ்' என்ற படத்தில் ஹீரோயினாக நடித்த திவ்யா உன்னி, கண்ணன் வருவான், பாளையத்து அம்மன், வேதம், ஆண்டான் அடிமை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு, கன்னட மொழிப்படங்களிலும் நடித்துள்ள இவர், 1990 முதல் 2006 வரை திரைப்படங்களில் நடித்தார்.

சுதிர் சேகர் என்பவரை 2002ஆம் ஆண்டு திருமணம்செய்து, கருத்து வேறுபாட்டால் 2016ஆம் ஆண்டு பிரிந்தார். இதையடுத்து 2018ஆம் ஆண்டில் அமெரிக்காவில் வசித்துவரும் அருண் குமார் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து அங்கேயே செட்டிலானார்.

ஏற்கனவே திவ்யா உன்னிக்கு இரு குழந்தைகள் இருக்கும் நிலையில், தற்போது மூன்றாவதாகக் பெண் குழந்தை பிறந்துள்ளது. சினிமாக்களில் நடிப்பதிலிருந்து ஒதுங்கியிருக்கும் இவர், நடனப்பள்ளி நடத்திவருகிறார்.

ABOUT THE AUTHOR

...view details