தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இயக்குநருக்காக மேடையில் கண்ணீர்விட்ட அனுஷ்கா! - அனுஷ்கா

நடிகை அனுஷ்கா மறைந்த இயக்குநர் கோடி ராமகிருஷ்ணாவை நினைத்து மேடையில் கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.

இயக்குநருக்காக மேடையில் கண்ணிர் விட்ட அனுஷ்கா!
இயக்குநருக்காக மேடையில் கண்ணிர் விட்ட அனுஷ்கா!

By

Published : Mar 24, 2020, 11:24 AM IST

நடிகை அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள 'நிசப்தம்’ திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. தற்போது கரோனா தொற்று காரணமாக படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இப்படத்தின் விளம்பரத்திற்காக ஈடிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளர் சுமா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் அனுஷ்கா, நிசப்தம் படக்குழுவினருடன் கலந்துகொண்டார்.

அப்போது அவரது திரையுலகப் பயணம் பற்றிய தொகுப்புக் காணொலி ஒளிபரப்பப்பட்டது. அதில், 'அருந்ததி' பட இயக்குநர் மறைந்த கோடி ராமகிருஷ்ணா இடம் பெற்றிருந்தார். அதைக்கண்டு உணர்ச்சிவசப்பட்ட நடிகை அனுஷ்கா, இயக்குநர் ராமகிருஷ்ணா இன்னும் சில காலம் நம்முடன் இருந்திருக்கலாம் என்று கூறி மேடையில் கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.

கோடி ராமகிருஷ்ணா இயக்கிய 'அருந்ததி' படத்தில் அனுஷ்கா நடித்திருந்தார். அப்படம் மூலம் அனுஷ்கா, பலரது பாராட்டுகளைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பரவிவரும் காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அனுஷ்கா!

ABOUT THE AUTHOR

...view details