தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நிறைமாத கர்ப்பிணி எமி மீண்டும் ‘ஆன் டியூட்டி’ - 2.0 சீனா ரிலீஸ்

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் எமி ஜாக்சன் படங்களில் நடிக்காதபோதும் தனது '2.0' படத்தின் புரோமோஷனில் தற்போது ஈடுபட்டு வருகிறார்.

Amy jackson with baby bump

By

Published : Aug 26, 2019, 2:38 PM IST

சீன மொழியில் வெளியாகும் '2.0' படம் குறித்து ரசிகர்களுக்கு ட்வீட் செய்துள்ளார் நடிகை எமி ஜாக்சன். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகி வசூலில் சாதனை படைத்த படம் '2.0'. சயின்ஸ் பிக்‌ஷன் திரில்லர் பாணியில் அமைந்திருந்த இந்தப் படத்தை பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கியிருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் ஹீரோ அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். லைகா புரொடக்‌ஷன் நிறுவனம் மிகப் பெரிய பொருட் செலவில் இப்படத்தை தயாரித்திருந்தது.

இந்தியாவில் அதிக பட்ஜெட்டில் உருவான '2.0', 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த முதல் தமிழப் படம் என்ற சாதனையை படைத்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்ட இந்தப் படம், தற்போது சீன மொழியில் வெளியாகவுள்ளது.

இதையடுத்து '2.0' படத்தின் சீன பதிப்பு செப்டம்பர் 6ஆம் தேதி ரிலீசாகிறது. இந்த நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்து தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் எமி ஜாக்சன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘சீனாவை கைப்பற்ற சிட்டி தயாராகிவிட்டான். சீனா முழுவதும் ஆயிரித்துக்கும் மேற்பட்ட திரையரங்கில் செப்டம்பர் 6ஆம் தேதி வருகிறான்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

எமியின் ட்வீட்

'2.0' படத்துக்கு பின்னர் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் எமி ஜாக்சன். இதனால் வேறு படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். இதையடுத்து சினிமா, ஃபேஷன் போன்றவற்றுக்கு குட்டி பிரேக் கொடுத்துவிட்டு தனது கர்ப்ப காலம் குறித்து ஒவ்வொரு அப்டேட்களையும் புகைப்படமாகவும், வீடியோவாகவும் வெளியிட்டு வந்தார் எமி. இதைத்தொடர்ந்து, தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அவர், '2.0' படத்தின் சீன ரிலீஸை புரோமோட் செய்யும் விதமாக அவர் ட்வீட் செய்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details