இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்திருக்கும் 'ஆடை' படம் நாளை வெளியாகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நாளில் இருந்தே 'ஆடை' படம் சர்ச்சைக்குரிய படமாக மாறியுள்ளது. படத்தின் டீசரில் தமிழ் சினிமாவில் எந்த நடிகையும் செய்யாத வகையில் துணிச்சலுடன் நிர்வாண காட்சியில் நடித்திருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் நெட்டிசன்கள் அமலா பாலை கடுமையாக விமர்சித்தனர். மேலும், படத்தின் டிரெய்லரும் பெரும் பூகம்பத்தை கிளப்பியது.
இணையத்தை அதிர வைத்த அமலா பால்! - viral
'ஆடை' படத்தின் புதிய போஸ்டரை அமலா பால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். உச்சக்கட்ட கவர்ச்சியில் அமலா பால் இருக்கும் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து அமலா பால் பேசும்போது, "ஆடை இல்லாமல் நடித்தபோது தன்னை பாஞ்சாலி போல் உணர்ந்தேன்" என்றார். இந்த பேச்சும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமலா பாலை நெட்டிசன்கள் தனிப்பட்ட முறையிலும் திட்டி வருகின்றனர். இதனால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், உச்சக்கட்ட கவர்ச்சியில் 'ஆடை' படத்தின் புதிய போஸ்டரை தனது ட்விட்டரில் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் அமலாபால். இந்த போஸ்டரில், 'யாரும் உள்ளே வராதீங்க... இது தடை செய்யப்பட்ட பகுதி' என்று மஞ்சள் ரிப்பனால் அமலா பாலின் உடலை மறைத்திருக்கும் வகையில் உள்ளது. செம ஹாட்டான இந்த புகைப்படம் இணையத்தை அதிர வைத்துள்ளது.