இந்தியாவில் கரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிலும் குறிப்பாக திரையுலகைச் சேர்ந்த பலருக்கும் தொற்று ஏற்பட்டுவருகிறது. இந்நிலையில், நடிகர் அர்ஜுனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
நடிகர் அர்ஜுனின் மகளுக்கு கரோனா! - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்
நடிகர் அர்ஜுனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அதில், "எனக்கு சமீபத்தில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில் என்னை நானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.
என்னுடன் கடந்த சில நாள்களாகத் தொடர்பில் இருந்தவர்கள் யாராக இருந்தாலும் உடல்நலனைக் கவனித்துக் கொள்ளுங்கள். அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும். அனைவரும் தயவுசெய்து முகக்கவசம் அணியுங்கள். நான் விரைவில் நல்ல ஆரோக்கியத்துடன் உங்களைச் சந்திப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.