தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சின்னக் கலைவாணருக்கு இன்று 58ஆவது பிறந்தநாள்!

தமிழ் சினிமா உலகின் சின்னக் கலைவாணராக கொண்டாடப்படும் நடிகர் விவேக் இன்று தனது 58ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

actor-vivekh

By

Published : Nov 19, 2019, 9:13 AM IST

தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக மக்களின் கலைஞனாக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகர் விவேக். நகைச்சுவையைத் தாண்டி மக்களை அறிவார்ந்த சிந்தனைக்கு இழுத்துச் சென்று திகட்டாத கருத்துகளை தனது பாணியில் எடுத்துரைக்கும் இந்தக் கலைஞனுக்கு இன்று 58ஆவது பிறந்தநாள்.

பாண்டிய மன்னர்கள் கோட்டையாம் மதுரை மண்ணில் அங்கய்யா பாண்டியன்-மணியம்மாள் ஆகியோருக்கு 1961ஆம் ஆண்டு பிறந்த விவேக் இன்று தமிழ்நாட்டின் கடைக்கோடி மனிதனுக்கும் நன்கு அறிமுகமானவர்.

80 காலகட்டத்தில் விவேக்

சினிமா துறையில் தனக்கென ஒரு பாணியை வகுத்துக்கொண்டு சமூக கருத்துகளை நகைச்சுவை வழியாகக் கடத்தி மக்களிடம் விழிப்புணர்வு சிந்தனையை தூண்டிய இந்த உன்னத நடிகன் 1987இல் வெளியான 'மனதில் உறுதி வேண்டும்' திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

புதுப்புது அர்த்தங்கள் தொடங்கி உரிமை ஊஞ்சலாடுகிறது, உழைப்பாளி, நந்தவனத்தேரு, ஏழையின் சிரிப்பில், மின்னலே, சாமி, சிவாஜி, வெள்ளைப் பூக்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.

உலக நாயகனுடன் விவேக்

கடின உழைப்புக்குச் சொந்தக்காரரான இவரை பாராட்டும் வகையில் இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழ்நாடு அரசின் விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகளைப் பெற்றுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடன் விவேக்

சினிமா துறை தொடங்கி இன்று சமூக சேவையில் ஈடுபட்டு புதிய தலைமுறைக்கு முன்னுதாரணமாக விளங்கிவருகிறார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் செல்லப்பிள்ளையாகவும் இருந்து அவருக்குப் பெருமை சேர்க்கும் பொருட்டு இன்று பல சமூக சேவைகளைச் செய்துவருகிறார்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் விவேக்

அதோடு மட்டும் இல்லாமல் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு இயற்கையை பேணி காக்கும் சீரிய முயற்சியில் தன்னை ஈடுபடுத்திவரும் நடிகர் விவேக் ஒரு சகாப்தம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

நடிகர் விஜயுடன் படப்பிடிப்பில் விவேக்

நகைச்சுவையால் மக்களின் உள்ளங்களை கொள்ளைகொண்டு சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் ஜனங்களின் கலைஞனுக்கு ஈடிவி பாரத்தின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...!

இதையும் படிங்க...

சூரரைப் போற்று - அறிவு எழுத்தில் சூர்யா பாடிய மாறா ராப்!

ABOUT THE AUTHOR

...view details