தனது நகைச்சுவையான பேச்சால் சமூகம் சார்ந்த கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் காமெடி நடிகர் விவேக். இதனால் இவருக்கு சின்ன கலைவானர் என்ற பெயரும் கிடைத்தது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரில் மரங்களை நட்டு வருகிறார். இன்றைய தலைமுறையினர் பயன்படும் வகையில் நல்ல கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார்.
விவேக்கின் புதிய பட பர்ஸ்ட்லுக்கை வெளியிடும் சூர்யா! - kollywood
காமெடி நடிகர் விவேக் கதாநாயகனாக நடிக்கும் 'வெள்ளை பூக்கள்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யா வெளியிடுகிறார்.
மேலும், காமெடியையும் தாண்டி, நான்தான் பாலா, மகனே என் மருமகனே மற்றும் சோனியா அகர்வாலுடன் பாலக்காட்டு மாதவன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் விவேக் புதிய படம் ஒன்றில் மீண்டும் கதாநாயகனாக நடிக்க இருப்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
படத்தின் பெயர் 'வெள்ளை பூக்கள்' என்றும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற 22ஆம் தேதி வெளியாகும் என பதிவிட்டுள்ளார். 'வெள்ளை பூக்கள்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அவரது நெருங்கிய நண்பரான நடிகர் சூர்யா வெளியிட இருக்கிறார். மேலும், 'வெள்ளை பூக்கள்' படம் ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளார். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம், இந்துஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் டென்ட்கொட்டா ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.