தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நடிகர் விவேக்கின் தாயார் காலமானார்! - நகைச்சுவை நடிகர் விவேக்

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகரான விவேக்கின் தாயார் மாரடைப்பால் காலமானார். மறைவுக்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

vivek

By

Published : Jul 17, 2019, 3:53 PM IST

Updated : Jul 17, 2019, 4:39 PM IST

தமிழ்த் திரையுலகில் 'சின்ன கலைவாணர்' என்று அழைக்கப்படுவர் நகைச்சுவை நடிகர் விவேக். இவர் சென்னை சாலிக்கிராமத்தில் தன்னுடைய குடும்பத்தோடு வசித்துவருகிறார்.

விவேக்கின் தாயார் மணியம்மாள் நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 86. இதையடுத்து மணியம்மாளின் உடல் இன்று காலை அவரது சொந்த ஊரான சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூர் கிராமத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டது.

அங்கு அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் நாளை காலை 10.30 மணிக்கு தகனம் செய்யப்பட உள்ளது. விவேக்கின் தாயார் மறைவுக்கு பல திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

Last Updated : Jul 17, 2019, 4:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details