2021 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் வேலையில், கடந்த சில நாள்களாக முக்கிய தலைவர்களுக்கு நிகராக பேசப்பட்டவர்கள் நடிகர் விஜயும், அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரும்தான்.
தேவை ஏற்பட்டால், அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் கட்சியாக உருமாறும் என அறிவிப்பு விடுத்த சில தினங்களுக்குள்ளாகவே எஸ்.ஏ. சந்திரசேகர் விஜய் மக்கள் இயக்கத்தை தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியாகப் பதிவு செய்தார். இவரது செயலுக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. தன்னுடைய பெயரை எந்த விவகாரத்திலும் யாரும் பயன்படுத்த வேண்டாம் என நடிகர் விஜய் தனது தந்தையின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன்.
தந்தை ஆரம்பித்துள்ள கட்சிப் பணிகளில் ஈடுபடும் விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்களுக்கும் எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து, விஜயின் தாயார் சோபா உள்ளிட்ட பலர் கட்சிப் பொறுப்புகளை ராஜிநாமா செய்து, சந்திரசேகரின் திட்டத்திலிருந்து பின்வாங்கினர்.