நடிகரும், நடன இயக்குநருமான லாரன்ஸ் நேற்று, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மாற்றுத்திறனாளி மாணவன் ஒருவர், 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு இசையமைத்த வீடியோவைப் பகிர்ந்து விஜய் மற்றும் அனிரூத் அவர்களிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார்.
அதில், "அந்த இளைஞர் பெயர் தான்சேன். எனது மாற்றுத்திறனாளிகள் குழுவில் இருக்கிறார். இந்த லாக்டவுன் சமயத்தில் 3 நாட்கள் பயிற்சி செய்து 'மாஸ்டர்' படத்தின் ஒரு பாடலை வாசித்திருக்கிறார். இவரது கனவே அனிருத், அவர்களின் இசையில் ஒரு சிறு பகுதி வாசிக்க வேண்டும் என்பதும், விஜய் அவர்கள் முன்னிலையில் இதை வாசிக்க வேண்டும் என்பதுதான்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், லாரன்ஸின் வேண்டுகோளுக்கு இணங்க விஜய்யும், அனிருத்தும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், 'நான் நேற்றிரவு நண்பன் விஜயிடம் பேசினேன். லாக்டவுன் முடிந்ததும் அந்த இளைஞரை அழைத்து வந்து, தன் முன்னால் வாசித்துக் காட்டச் சொன்னார்.
அதேபோல அனிருத்தும், தன்னுடைய இசையில் அவரை வாசிக்க வைப்பதாக கூறியுள்ளார். அந்த இளைஞரின் கனவை நனவாக்கிய நண்பன் விஜய்க்கும் அனிருத்துக்கும் என்னுடைய மிகப்பெரிய நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:'வாத்தி கம்மிங்' பாடலுக்கு வெறித்தனமாக இசையமைத்த மாற்றுத்திறனாளி: வியந்த அனிருத்