தெலுங்குத் திரையுலகில் மாஸ் அந்தஸ்து பெற்ற நடிகர்களின் பட்டியலில் முன்னணி வகிப்பவர் நடிகர் மகேஷ் பாபு. இவர் நேற்று (ஆக. 9) தனது 45ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
அவருக்கு சிரஞ்சீவி, ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் மகேஷ்பாபுவின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடி வந்தனர்.
#HBDMaheshBabu என்ற ஹேஷ்டேக் அதிக அளவிலான ட்வீட்களைப் பெற்று இந்திய அளவில் சாதனை புரிந்தது. இந்நிலையில், தற்போது தெலுங்கு பிரபலங்கள் இடையே #GreenIndiaChallenge என்ற சேலஞ்ச் பிரபலமாகி வருகிறது.
இதில் ஒருவர் மரக்கன்றை நட்டு அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, அது குறித்து எடுத்துச் சொல்லி, பிற பிரபலங்களையும் மரக்கன்றுகள் நட தூண்ட வேண்டும்.
தனது பிறந்தநாளை முன்னிட்டு மகேஷ்பாபு இந்த சேலஞ்சில் பங்கேற்றுள்ளார். அதன்படி மரக்கன்று நடும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட மகேஷ்பாபு ”எனது பிறந்தநாளைக் கொண்டாட இதைவிட சிறந்த வழி கிடையாது. நான் #GreenIndiaChallenge சேலஞ்சை ஜூனியர் என்டிஆர், விஜய், ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கு விடுக்கிறேன். இந்த சங்கிலி, எல்லைகள் கடந்து தொடரட்டும்.
மகேஷ்பாபுவின் சவாலை ஏற்றார் விஜய்! - விஜய் லேட்டஸ்ட் நியூஸ்
தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் பசுமை இந்தியா சவாலை ஏற்று விஜய் புகைப்படங்கள் பகிர்ந்துள்ளார்.
விஜய்
இது குறித்து விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில், ”இது உங்களுக்காக மகேஷ்பாபு. பசுமையான இந்தியாவும் நல்ல ஆரோக்கியமும் கிடைக்க என் வாழ்த்துக்கள். நன்றி, பாதுகாப்பாக இருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். விஜய் வெளியிட்டிருக்கும் இந்தப் புகைப்படம் தற்போது ரசிகர்களைக் கவர்ந்து சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.