தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தரமான கதைக்களம் உள்ள படங்களைத் தேர்வுசெய்யும் வெற்றி! - Latest kollywood news

நடிகர் வெற்றி தொடர்ந்து தரமான கதைக்களம் உள்ள படங்களில் மட்டும் கவனம் செலுத்திவருகிறார்.

Actor Vetri
Actor Vetri

By

Published : Jul 26, 2020, 2:10 PM IST

ஒரு நடிகர் தான் நடித்த இரண்டே படங்களின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடம்பிடிப்பது அரிதான விஷயம். அந்த அரிதான விஷயத்தைச் செய்துகாட்டியவர்தான் நடிகர் வெற்றி.

இவர் ஹீரோவாக நடித்த வித்தியாசமான கதைக்களம் கொண்ட எட்டு தோட்டாக்கள், ஜீவி ஆகிய இரண்டு படங்களும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைக் கண்டன. இந்நிலையில், அவர் நடிப்பில் உருவாகிவரும் வனம், கேர் ஆஃப் காதல், மெமரிஸ் ஆகிய படங்கள் அவரின் முந்தைய இரண்டு படங்களைப் போலவே வித்தியாசமாகவும், சுவாரசியமாகவும் இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

தொடர்ந்து தனது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நல்ல கதைக்களம் உள்ள படங்களில் வெற்றி நடித்துவருவது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details