சென்னை: 'சோழநாட்டான்' என்ற படத்தில் சோழ மன்னன் வேடத்தில் நடிகர் விமல் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் சினிமாவில் பண்டைய காலத்து மன்னர்களாகத் தோன்றியவர்களின் கதாபாத்திரம் எவர்கிரீனாக ரசிகர்கள் மனதில் பதிந்துள்ளது. அந்த வகையில் எம்ஜிஆர் முதல் மன்னனாகத் தோன்றிய வடிவேலு வரை, அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
இந்த நிலையில், 'சோழநாட்டான்' என்று இடம்பெறும் பிளாஷ்பேக் காட்சிகளில் சோழ மன்னனாகத் தோன்றவுள்ளாராம் நடிகர் விமல். அவரது மனைவியாக 'தெலுங்கு நடிகை கரோன்யா கேத்ரின்' நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தஞ்சை பகுதியில் படமாக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
ரஞ்சித் கண்ணா இயக்கும் இந்தப் படத்தை ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாக்கி வருகிறார்கள்.