இயக்குநர் பாரி.கே.விஜய் இயக்கத்தில் நடிகர் வைபவ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துவரும் படம் ஆலம்பனா. ஃபேன்டஸி ஜானரில் உருவாகும் இப்படத்தில் பார்வதி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ஆனந்த்ராஜ், முரளி ஷர்மா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் - தயாரிப்பாளர் சந்துரு இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கும் இப்படத்திற்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்கிறார்.
இன்றைக்கு உள்ள குழந்தைகளுக்கு அலாவுதீன் பூதம் பற்றி எடுத்துக்கூறும் வகையில் ஆலம்பனா படம் தயாராகிறது. இப்படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களாலும் கவனம் ஈர்க்கக்கூடிய படமாக ஃபேன்டஸி கான்செப்ட்டோடும் பிரமாண்டமான ஏற்பாடுகளுடன் தயாராகிறது.
'ஆலம்பனா' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'எப்ப பார்த்தாலும்' என்ற பாடல் நாளை (ஜூலை.29) மாலை வெளியாகிறது.
இதையும் படிங்க: 'ஆலம்பனா' - வைபவ் நடிப்பில் உருவாகும் அடுத்த பேண்டஸி படம்