தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

உதயநிதியை நேரில் சந்தித்த வைகைப்புயல்

நடிகர் வடிவேலு திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை நேற்று (செப். 21) நேரில் சென்று சந்தித்துள்ளார்.

வைகைப்புயல்
வைகைப்புயல்

By

Published : Sep 22, 2021, 1:20 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் வடிவேலு. இவர் கடைசியாக 'மெர்சல்' படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார்.

பிறகு இம்சை அரசன் 23.ம் புலிகேசி படத்தின்போது தயாரிப்பாளர் சங்கர் கொடுத்த புகாரினால் அவருக்கு 'ரெட் கார்ட்' கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக வடிவேலு படத்தில் நடிக்காமல் இருந்தார்.

இதனையடுத்து தற்போது அவருக்கு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்ட் நீக்கப்பட்டு, நாய் சேகர் என்ற படத்தில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் மீண்டும் திரைத் துறைக்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் வடிவேலு, திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை நேற்று (செப். 21) நேரில் சென்று சந்தித்துள்ளார்.

அவருக்குப் பூங்கொத்து கொடுத்து வடிவேலு எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிறது. மேலும் வடிவேலு திடீரென உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்ததற்கும், அரசியலுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

இதையும் படிங்க: டேனியல் சேகர் வேட்டியில் கலக்குகிறீர்கள் : ராணாவைப் புகழ்ந்த பிரித்விராஜ்

ABOUT THE AUTHOR

...view details