தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

Vadivelu affected Covid 19: வடிவேலுவிற்குக் கரோனா - என்ன நிகழ்ந்தது? - சென்னை தனியார் மருத்துவமனையில் வடிவேலு அனுமதி

Vadivelu affected Covid 19: லண்டன் சென்று திரும்பிய நகைச்சுவை நடிகர் வடிவேலுவிற்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Corona to Vadivelu: வடிவேலுவுக்கு கரோனா? மருத்துவமனை அனுமதியின் பின்னணி என்ன?
Corona to Vadivelu: வடிவேலுவுக்கு கரோனா? மருத்துவமனை அனுமதியின் பின்னணி என்ன?

By

Published : Dec 24, 2021, 4:15 PM IST

Vadivelu affected Covid 19: சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்க இருக்கும் திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு வடிவேலு இத்திரைப்படத்தில் கமிட்டாகி உள்ளதால், இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு முந்தைய பணிகளுக்காக லண்டன் சென்றிருந்த வடிவேலு, அங்கு 10 நாட்கள் தங்கியிருந்தார். லண்டன் சென்று திரும்பிய அவருக்குக் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து வடிவேலு நேற்று (டிசம்பர் 23) இரவு ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் பெரும் சோகத்துக்குள்ளாகியுள்ளனர்.

இதையும் படிங்க:Golden Visa வாங்கிய முதல் தமிழ் நடிகர் யார் தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details