தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வைபவின் ‘டாணா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது - யுவராஜ் சுப்ரமணி

வைபவ் நடிப்பில் உருவாகிவரும் ‘டாணா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

taana

By

Published : May 28, 2019, 10:48 AM IST

இயக்குநர் செல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய யுவராஜ் சுப்பிரமணி இயக்கத்தில் வைபவ் நடித்துவரும் படம் ‘டாணா’. இதில் பாண்டியராஜன், யோகி பாபு, ஹரிஷ் பெரேடி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ‘டாணா’ என்பதற்கு போலீஸ் என்று பொருள், போலீஸ்காரர்களை டாணாக்காரார்கள் என அழைக்கும் பழக்கம் தமிழ்நாட்டில் இன்னும் சில பகுதிகளில் உள்ளது. பாரம்பரிய போலீஸ் குடும்பத்தில் பிறந்த வைபவை போலீசாக்க அவர் தந்தை முயற்சி செய்வது போல கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாம்!

டாணா பர்ஸ்ட் லுக்

இந்தப் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் முதல் பலரும் இதனை ஷேர் செய்து வருகின்றனர். சிவகார்த்திகேயன் நடித்த ‘காக்கி சட்டை’ படத்துக்கு முதலில் தேர்வு செய்யப்பட்ட பெயர் ‘டாணா’ என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details