தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'சொல்லப்படாத கதையைக் கண்முன் நிறுத்துகிறது' - சார்பட்டா குறித்து சூர்யா - Sarpatta Parambarai movie in amazon

நடிகர் சூர்யா, 'சார்பட்டா பரம்பரை' படத்தை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சூர்யா - சார்பட்டா
சூர்யா - சார்பட்டா

By

Published : Jul 29, 2021, 2:46 PM IST

பா. இரஞ்சித் இயக்கத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் கடந்த 22ஆம் தேதி வெளியான திரைப்படம் 'சார்பட்டா பரம்பரை'. இதில் ஆர்யா, துஷாரா, பசுபதி, கலையரசன் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்கள் பலரும் பாராட்டியுள்ளனர். அந்தவகையில் நடிகர் சூர்யா 'சார்பட்டா பரம்பரை' படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள பதிவில், "சார்பட்டா பரம்பரை இதுவரை சொல்லப்படாத கதையை கண்முன் நிறுத்துகிறது.

வடசென்னை மக்களின் வாழ்வியலை திரை அனுபவமாக மாற்ற இயக்குநரும், நடிகர்களும், ஒட்டுமொத்த படக்குழுவும் கொடுத்திருக்கும் உழைப்பு ஆச்சரியப்பட வைக்கிறது. வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:இயக்குநர் பிரியதர்ஷனுடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவம் - நடிகை ரம்யா நம்பீசன்

ABOUT THE AUTHOR

...view details