தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மீண்டும் இணையும் வெற்றிக்கூட்டணி? - சூர்யா பிறந்தநாள்

இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

suriya
suriya

By

Published : Jul 21, 2021, 12:47 PM IST

சென்னை:நடிகர் சூர்யா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். அவர் ஆரம்ப காலத்தில் இயக்குநர் பாலா இயக்கிய 'நந்தா', 'பிதாமகன்' ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கவனிக்கப்பட்டார்.

இந்த இருவர் கூட்டணி தமிழ் திரையுலகில் வெற்றிக்கூட்டணியாக பார்க்கப்படுகிறது. தற்போது சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் 'சூர்யா 40' படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் பாலா இயக்கத்தில் சூர்யா மீண்டும் நடிப்பதாக தகவல் வெளியாக உள்ளது. இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சூர்யாவின் பிறந்தநாளன்று வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நீட் சமூகநீதிக்கு எதிரானது- சூர்யா

ABOUT THE AUTHOR

...view details