ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ் சார்பில் விஜயகுமார் தயாரிக்கும் புதிய படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும், சிரிஷ்டி டாங்கே கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள்.
சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தில் நடிக்கும் ஸ்ரீகாந்த்! - சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தில் நடிக்கும் ஸ்ரீகாந்த்
சென்னை: ஶ்ரீகாந்த் - சிருஷ்டி டாங்கே நடிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தின் படப்பிடிப்பு இன்று (மார்ச் 4) பூஜையுடன் தொடங்கியது.
srikanth
மேலும், இவர்களுடன் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜே பப்பு, தேவிப்பிரியா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
மணி பாரதி இயக்கும் இப்படத்திற்கு கோகுல் ஒளிப்பதிவு செய்கிறார். தாஜ் நூர் இசையமைக்கிறார். இப்படத்தின், படப்பிடிப்பு ஊட்டியில் இன்று ( மார்ச் 4) பூஜையுடன் தொடங்கியது. சஸ்பென்ஸ் திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளிட்ட மற்ற விவரங்களை படக்குழுவினர் விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.