தென் இந்தியாவின் முதல் மக்கள் தொடர்பாளரும் தமிழ்த் திரையுலகத் தகவல் களஞ்சியமுமான பிலிம் நியூஸ் 'ஆனந்தன்' அவர்களின் நினைவு நாள்.
தென் இந்தியாவின் முதல் பி.ஆர்.ஓ. நினைவலைகள் நூலை வெளியிட்ட சிவக்குமார் - பிலிம் நியூஸ்
சென்னை: பிலிம் நியூஸ் ஆனந்தனின் 'ஞாபகம் வருதே' என்னும் நினைவலைகள் நூலை நடிகர் சிவகுமார் வெளியிட்டார்.
இதனை முன்னிட்டு நடிகர் சிவகுமாரின் இல்லத்தில் பிலிம் நியூஸ் ஆனந்தனின் 'ஞாபகம் வருதே ' நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. சிவக்குமார் நூலை வெளியிட இயக்குநர் ஞான ராஜசேகரன் ஐ.ஏ.எஸ். அதனை பெற்றுக்கொண்டார். இந்த நூலில் பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களை பற்றிய பல்வேறு சினிமா பிரமுகர்களின் அனுபவ நினைவுகளைக் கொண்டு அருள்செல்வன் என்பவரால் தொகுக்கப்பட்டுள்ளது.
இந்த நூல் வெளியீட்டு விழாவில் மக்கள் குரல் ராம்ஜி , திரைப்பட இயக்குநர் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் , பிலிம் நியூஸ் ஆனந்தனின் மகன் மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு , பி.ஆர்.ஓ. யூனியன் தலைவர் விஜயமுரளி ஆகியோர் கலந்து கொண்டனர்.