தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளவர் நடிகர் சிம்பு. இவர் கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களிலிருந்து விலகி இருந்த நிலையில், தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் ரீ-என்ட்ரி கொடுப்பதாக அறிவித்தார்.
அதன்படி, இன்று முதல் ட்விட்டர், பேஸ்புக், யூ-டியூப், இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்களில் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளார். அனைத்து தளத்திலும் ‘Silambarasan TR' என்ற பெயரில் கணக்கு திறந்துள்ளார்.