தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

’எனது தேவைகள் அறிந்து சகோதரனாக நடத்தியவர் தயாரிப்பாளர் சுவாமிநாதன்’ - நடிகர் சிம்பு இரங்கல் - தயாரிப்பாளர் சுவாமிநாதன்

கரோனாவால் பாதிக்கப்பட்டு காலமான தயாரிப்பாளர் சுவாமிநாதனுக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Actor Simbhu
நடிகர் சிம்பு

By

Published : Aug 12, 2020, 3:53 AM IST

சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் எல்.எம்.எம். சுவாமிநாதன் மறைவுக்கு, நடிகர் சிலம்பரசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தயாரிப்பாளர் எல்.எம்.எம் சுவாமிநாதன் எனக்கு மிக நெருக்கமானவர். மென்மையான மனிதர். எந்த நேரத்தில் யாரை வைத்து, என்ன மாதிரி படம் பண்ண வேண்டும் என்பதில் தெளிவானவர்.

நட்புக்கு இலக்கணமானவர். சிலம்பாட்டம் பட களத்தில் என்னை பத்திரமாகப் பார்த்துக் கொண்டவர். இலங்கையில் படப்பிடிப்பு நடைபெற்றது. எனது தேவைகளையறிந்து சகோதரனைப் போல் நடத்தி, படப்பிடிப்பையும் முடித்து வந்தார்.

நிறைய நினைவலைகள் உள்ளன. ஆனால், இப்படியொரு சில நாட்களில் விடைபெற்றுச் செல்வாரென தெரியாது. மருத்துவமனை சென்று பார்த்து ஆறுதல்கூட சொல்லமுடியாத ஒரு நோயோடு போராடியிருக்கிறார் என்பது வேதனைக்குரியது.

நடிகர் சிம்பு அறிக்கை

அஸ்வின் மற்றும் அசோக் அவர்களுக்கு என்றும், எந்தகாலத்திலும் நாங்கள் உறுதுணையாக இருப்போம். குடும்பத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு அமைதியான மனிதனை இழந்திருப்பதில் வருத்தமடைகிறேன்.

அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், சுற்றத்திற்கும், திரையுலகினருக்கும் என் ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆன்மா இறைவன் மடியில் இளைப்பாறட்டும், வேண்டிக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கரோனாவால் காலமான புதுப்பேட்டை தயாரிப்பாளர்!

ABOUT THE AUTHOR

...view details