தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நாய் சேகர் படக்குழுவில் இணையும் சிவகார்த்திகேயன்?; நடிகர் சதீஷ் உருக்கம்! - kollywood cinema latest news

நாய் சேகர் படக்குழுவில் இடம் பெறும் ஓர் பாடலுக்கு, நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் வரிகளை எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சதீஷின் ட்விட்டர் பதிவு
நடிகர் சதீஷின் ட்விட்டர் பதிவு

By

Published : Nov 30, 2021, 9:41 PM IST

நகைச்சுவை நடிகர் சதீஷ், குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா ஆகியோர் நடிக்கும் படம் 'நாய் சேகர்'. இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்று பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த படக்குழுவில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார். அதாவது இப்படத்தில் ஒரு பாடலுக்கான வரிகளை சிவகார்த்திகேயன் எழுதவுள்ளார்.

நடிகர் சதீஷின் ட்விட்டர் பதிவு

இது குறித்து நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றினை வெளியிட்டுள்ளார். அதில், “ நாய் சேகர் படத்தில் வரும் ஓர் இனிமையான பாடலுக்கு நண்பன் சிவகார்த்திகேயன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். பாடலுக்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மிக்க நன்றி நண்பா. லவ் யூ ஆல்வேஸ்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ஆளும்வர்க்கத்தை அடி வெளுத்து வாங்கும் 'மாநாடு' - சீமான் புகழாரம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details