தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி இடம் பதித்த நடிகர் சரத்குமார், 67 வயதிலும், கடுமையான உடற்பயிற்சி, சீரான உணவுப் பழக்கவழக்கங்களால் தன் உடலை இளமையாகப் பராமரித்துவருகிறார்.
இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 1) தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் சரத்குமார் தெரிவித்தார்.
அதில், ”என் நண்பர்கள், உறவினர்கள், என் கட்சி உறவுகளுக்கு மாலை வணக்கம். இன்று மாலை எனக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் கடந்த வாரம் வரை தொடர்பில் இருந்தவர்களை கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.