தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஆர்யாவுடன் புதிதாக கமிட்டாகியுள்ள இளம் நடிகர்!

இயக்குநர் பா. இரஞ்சித்தின் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்துவரும் புதிய திரைப்படத்தின் படக்குழுவில் இளம் நடிகர் ஒருவர் இணைந்துள்ளார்.

actor Santhosh Pratap to act in Pa Ranjith new movie Salpetta
actor Santhosh Pratap to act in Pa Ranjith new movie Salpetta

By

Published : Feb 25, 2020, 5:40 PM IST

கபாலி, காலா என அடுத்தடுத்து ரஜினியுடன் திரைப்படங்கள் இயக்கிய இயக்குநர் பா. இரஞ்சித், நடிகர் ஆர்யாவுடன் தனது அடுத்த படத்திற்கு கமிட்டாகியுள்ளார்.

வடசென்னையை கதைக்களமாகக் கொண்டு குத்துச்சண்டை போட்டியை மையமாகவைத்து இத்திரைப்படம் உருவாகிவருகிறது. படத்தின் தலைப்பு இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் இத்திரைப்படத்திற்கு 'சல்பேட்ட' எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் 'அட்டக்கத்தி', 'மெட்ராஸ்', 'கபாலி' திரைப்படங்களில் நடித்த கலையரசன் இத்திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் இயக்குநர் பார்த்திபன் இயக்கிய 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் சந்தோஷ் பிரதாப்பும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்திற்காக உடற்பயிற்சி செய்து உடலை கட்டுமஸ்தாக மாற்றியுள்ளாராம் சந்தோஷ் பிரதாப்.

இதையும் படிங்க: கவலைகள் போக்கி நடனமாடுங்கள் - சிம்ரன் வெளியிட்ட க்யூட் டான்ஸ் வீடியோ

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details