தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

Santhanam on Jai Bhim issue: அடுத்தவரைத் தாழ்த்திப் பேசுவது தேவையற்றது - ஜெய் பீம் குறித்து சந்தானம் - ஜெய் பீம்

'ஜெய் பீம்' (Jai bhim) பட விவகாரம் தொடர்பாக திரையுலகினர் பலரும் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துவரும் நிலையில், நடிகர் சந்தானம் (Actor Santhanam) படம் குறித்த தனது கருத்தை (Santhanam on Jai Bhim issue) வெளிப்படுத்தியுள்ளார்.

சந்தானம்
சந்தானம்

By

Published : Nov 17, 2021, 9:55 AM IST

நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'ஜெய் பீம்' (Jai bhim). ஒரு பக்கம் படம் மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ள நிலையில், மறுபக்கம் படம் குறித்து சர்ச்சை வெடித்து விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இதன் காரணமாகத் திரையுலகினர் பலரும் சூர்யாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துவருகின்றனர். இந்த விவகாரத்தில் நடிகர் சந்தானம் ஜெய் பீம் படம் குறித்த தனது நிலைப்பாட்டை (Santhanam on Jai Bhim issue) கூறியுள்ளது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

'ஜெய் பீம்' பட விவகாரம் தொடர்பாகப் பேசிய சந்தானம் (Actor Santhanam), "சினிமாவில் ஒருவரை உயர்த்திச் சொல்ல வேண்டும் என்பதற்காக மற்றவரைத் தாழ்த்திச் சொல்வது சரியல்ல.

சந்தானம்

ஒருவருக்கு இந்து மதம் பிடித்திருக்கிறது என்பதற்காக அந்த மதத்தைப் பற்றி உயர்வாகச் சொல்லலாம். ஆனால் அதற்காக மற்ற மதத்தைப் பற்றி குறைவாகச் சொல்லக் கூடாது. மக்கள் எந்தக் கருத்தை எடுத்துக்கணும்’னு தெளிவா இருக்காங்க.

எல்லா சாதி மக்களும் ஒன்றாக வந்துதான் இரண்டு மணி நேரம் படம் பார்க்கிறாங்க. அடுத்தவரைத் தாழ்த்திப் பேசுவது தேவையில்லாத விஷயம்" எனத் தெரிவித்துள்ளார். 'சபாபதி' (Santhanam's Sabapathy) படத்தின் செய்தியாளர் சந்திப்பில், நடிகர் சந்தானம் ஜெய் பீம் பட விவகாரம் குறித்து இவ்வாறு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:Jai Bhim: ராஜாகண்ணு மனைவி பார்வதி அம்மாளுக்கு ரூ.15 லட்சம் வழங்கிய சூர்யா

ABOUT THE AUTHOR

...view details