தேசிய ஊரடங்கால் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் தங்களது அன்றாட செயல்பாடுகளை புகைப்படங்களாகவும் காணொலிகளாகவும் சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாது, தங்களது பழைய கால புகைப்படத்தையும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விஜய்யின் நெருங்கிய நண்பரும் தொகுப்பாளரும் நடிகருமான சஞ்சீவ் தனது சமூக வலைதளப்பக்கத்தில், சமீப காலமாக விஜய் தொடர்பான பழைய புகைப்படத்தைப் பகிர்ந்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு சஞ்சீவ், கல்லூரி படிக்கும் காலத்தில் விஜய் தனது நண்பர்களுடன் சேர்ந்து நிற்கும் கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தைப் பகிர்ந்தார். இது நெட்டிசன்களையும் விஜய் ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தது.
தற்போது சஞ்சீவ் 2014ஆம் ஆண்டு நண்பர்களுடன் சேர்ந்து வெளிநாட்டுக்குச் சென்றபோது எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். '2014 நண்பர்களுடன் வெளிநாட்டு ட்ரிப்' என அதில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திலும் விஜய் இருப்பதால், நெட்டிசன்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
புகைப்படத்தின் பின்னணியில் மெக்ஸிகானோ என்று எழுதப்பட்டிருப்பதால், இது மெக்ஸிகோவில் எடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. படத்தில் சஞ்சீவ், விஜய், நடிகர் ஸ்ரீநாத் உள்ளிட்டோர் மல்டி கலர் சால்வையோடு தலையில் பெரிய தொப்பிகளையும் அணிந்துள்ளனர். ஆனால், விஜய் மட்டும் சால்வை அணிந்து புன்சிரிப்புடன் நிற்கிறார். இதனையடுத்து ரசிகர்கள் இது போன்று விஜய்யின் வெளியிடப்படாத (Unseen picture) புகைப்படத்தை வெளியிடுமாறு சஞ்சீவிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ’வாத்தி கம்மிங்’- விஜய் பாடலுக்கு நடனமாடிய வெளிநாட்டு மக்கள்