சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் மூன்றாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளையும், கட்டுப்பாடுகளையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமைபடுத்தப்பட்டுள்ளது. இருந்த போதிலும் பாதிப்புக்கள் அதிகரித்து வருகின்றன. இந்தக் கரோனா தொற்றால் அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள், மருத்துவர்கள், காவல்துறையினர் எனப் பாரபட்சமின்றி அனைவரும் பாதித்து வருகின்றனர். எத்தனை பாதுகாப்பாக இருந்தாலும் இதன் பரவல் குறைந்தபாடில்லை.