இயக்குநர் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். தெலுங்கில் எடுக்கப்படும் இப்படம் தமிழ், இந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்பட உள்ளது. தற்காலிகமாக '#RC15' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் தில்ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இது இந்த நிறுவனத்தின் 50ஆவது படமாகும்.
2001ஆம் ஆண்டு 'முதல்வன்' பட ரீமேக்கை இந்தியில் 'நாயக்' என்ற பெயரில் எடுத்தார் இயக்குநர் ஷங்கர். இந்தப் படத்தில் அனில் கபூர் ஹீரோவாக நடித்தார். இதைத் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தமிழ் அல்லாத வேற்று மொழி ஹீரோவை ஷங்கர் இயக்கவுள்ளார்.