நடிகர் ராம் சரண் தனது தந்தை சிரஞ்சீவி நடிக்கும் 'சயீரா நரசிம்ம ரெட்டி' என்ற வரலாற்றுப் படத்தை ரூ.200 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரித்து வருகிறார். இப்படத்தில், அமிதாப் பச்சன், நயன்தாரா, விஜய் சேதுபதி, தமன்னா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
மேலும், சயீரா நரசிம்ம ரெட்டி படத்திற்காக சிரஞ்சீவிக்கு சொந்தமான பண்ணை வீட்டின் வளாகத்தில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றுவந்தது. இந்நிலையில், பண்ணை வீட்டில் அமைக்கப்பட்ட பிரமாண்ட செட் எதிர்பாராத விதமாக தீப்பிடித்து எரிந்ததில் ரூ.2 கோடி விலை மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்ததாக தெரிகிறது.