தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

போதை பொருள் விவகாரம்: நேரில் ஆஜரான ரகுல் ப்ரீத் சிங்! - tollywood drug case

போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.

ரகுல் ப்ரீத் சிங்
ரகுல் ப்ரீத் சிங்

By

Published : Sep 3, 2021, 1:48 PM IST

தெலுங்கு திரைப்பட இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் சிலர் போதை மருந்து பயன்படுத்திய விவகாரத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு சிக்கினர். இயக்குநர் பூரி ஜெகநாதன், ராணா, ரகுல் ப்ரீத் சிங், சார்மி கவுர், நவ்தீப் ரவிதேஜா உள்பட 12 பிரபலங்கள் போதை பொருள் விவகாரத்தில் சிக்கினர்.

இந்நிலையில் இவ்விவகாரத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் இன்று (செப்.03) ஹைதராபாத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகினார். அவரிடம் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக தீவரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று (செப்.02) நடிகை சார்மியிடம் அமலாக்கத்துறை அலுவலர்கள் சுமார் எட்டு மணி நேரம் சோதனை மேற்கொண்டனர்.

ரகுல் ப்ரீத் சிங்

மேலும் ரகுல் ப்ரீத் சிங்கைத் தொடர்ந்து வரும் 6ஆம் தேதி நடிகர் ராணா விசாரணைக்கு ஆஜராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக கன்னட திரைப் பிரபலங்களான சஞ்சனா, ராகினி இருவரும் போதை மருந்து உட்கொண்டது உறுதி செய்யப்பட்டது. அவர்களின் தலைமுடி மாதிரிகளைக் கொண்டும், எஃப்எஸ்எல் சோதனை மூலமும் போதைப் பொருள் பயன்படுத்தியது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details