கஸ்தூரி ராஜா இயக்கத்தில் 1991ஆம் ஆண்டு ராஜ்கிரண் தயாரித்து நடித்திருந்த திரைப்படம் 'என் ராசாவின் மனசிலே'. இப்படத்தில்தான் நடிகர் வடிவேலு அறிமுகமானார். என் ராசாவின் மனசிலே இப்போது வரையிலும் மக்கள் மனத்திலே அழியாமல் உள்ளது. அதற்குக் காரணம் இளையராஜா. அவரது இசையில் இப்படத்தின் அத்தனைப் பாடல்களும் பெரும் ஹிட் அடித்தன.
2ஆம் பாகமாக உருவாகும் ராஜ்கிரணின் 'என் ராசாவின் மனசிலே' - இரண்டாம் பாகமாக உருவாகும் ராஜ்கிரணின் என் ராசாவின் மனசிலே
சென்னை: ராஜ்கிரண் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற 'என் ராசாவின் மனசிலே' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது.
Rajkiran
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இப்படத்தை இயக்குவது வேறு யாருமில்லை. ராஜ்கிரணின் மகன் திப்புசுல்தான்தான். இது குறித்து ராஜ்கிரண் கூறியதாவது, "எனது மகனின் இருபதாவது பிறந்தநாள் இன்று. என் ராசாவின் மனசிலே படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதிமுடித்துவிட்டு திரைக்கதை எழுதிக்கொண்டு இருக்கிறார். அவரே படத்தையும் இயக்குகிறார். அவர் மிகப்பெரிய இயக்குனராக வர உங்களின் பிரார்த்தனையையும் வாழ்த்துகளையும் வேண்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.