படப்பிடிப்புக்காக கடந்த மாதம் 16ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்திற்குச் சென்றார். முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ஹைதராபாத்திலிருந்து விமானம் மூலம் அவர் இன்று சென்னை திரும்பினார்.
அப்போது, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், ”அனைவருக்கும் என்னுடைய அட்வான்ஸ் பொங்கல் நல்வாழ்த்துகள் “ என்றார்.
தர்பார் படத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் மலேசியாவில் வெளியிடத் தடைவிதித்தது, பட விநியோகஸ்தர்கள் தரப்பு பிரச்னை, குடியுரிமைச் சட்டம் குறித்தான செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ரஜினிகாந்த் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் உடனடியாகப் புறப்பட்டுச் சென்றார்.
செய்தியாளர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறிய ரஜினி இதையும் படிங்க: மிஷ்கினின் 'சைக்கோ' - டிரெய்லர் வெளியீடு