கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. காசர்கோடு, பாலக்காடு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் நிலம்பூர் வெள்ளத்தில் சிக்கி பெரும் சேதத்தை சந்தித்துள்ளது.
வெள்ளம் பாதித்த பகுதிக்கு உதவும் நடிகர் ரகுமான் - கேரள வெள்ள பெருக்கு
நடிகர் ரகுமான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
actor Rahman
இந்நிலையில், நடிகர் ரகுமான் தனது சொந்த ஊரான நிலம்பூருக்கு சென்றார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அங்கு தங்கி அம்மக்களுக்கு தேவையான உதவிகள் கிடைத்திட உரிய ஏற்பாடுகள் செய்துவருகிறார்.