சென்னை :தெலுங்கில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் பிரபாஸ். இவர், 2002ஆம் ஆண்டு ஈஷ்வர் என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு, இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களிலும் நடித்துவருகிறார்.
எனினும், 2004இல் வெளியான வர்ஷம் என்ற தெலுங்கு படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து, மிர்ச்சி, முன்னா, டார்லிங், மிஸ்டர், பெர்ஃபெக்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது வெற்றிப் படங்கள் ஆகும். இவர், நடிப்பில் பல்வேறு மொழிகளில் வெளியான பாகுபலி, பாகுபலி 2 ஆகிய இரு படங்களும் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தன.
எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் நடித்த பிரபாஸூக்கு பெரும் பெயரும் புகழும் கிடைத்தது. பாகுபலியின் இரண்டு பாகங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இப்படம் மூலம் உலக ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.