கோல்டன் குளோப் (Golden Globe) விருதுக்கான திரையிடல் முயற்சியாக பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படம் லாஸ் ஏஞ்சல்ஸில் திரையிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த வெகு சில இயக்குநர்களில் பார்த்திபன் முக்கியமானவர். வணிக ரீதியாக வெற்றிபெற முடியாமல் போனாலும், வித்தியாசமான முயற்சிகள் செய்யத் தயங்காதவர். அவரது சமீபத்திய முயற்சிதான் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’. இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார், ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இது பார்த்திபனே தயாரித்து, இயக்கி நடித்த சோலோ ஆக்டிங் திரைப்படமாகும். இந்திய திரை பிரபலங்கள் பலரது பாராட்டை பெற்ற இத்திரைப்படம், கோல்டன் குளோப் விருதுக்கான திரையிடல் முயற்சியாக லாஸ் ஏஞ்சல்ஸில் திரையிடப்பட்டுள்ளது.
இது குறித்து பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், Los Angeles -ல் இன்று Golden globe-க்கான திரையிடல் முயற்சி என்முன்பதிவு, திரைக்கடல் தாண்டிய முன்னேற்றம் என் தவப்பயன், வாழ்த்துங்கள் நண்பர்களே, L A-ல் உள்ளவர்கள் L A county-ஹார்கின் செரிடாஸ் என்ற திரையரங்கில் நம் OS7 மூன்று காட்சிகள்நடைபெறுகிறது. நானிருப்பேன் அங்கு-நட்போடு வாருங்கள் என குறிப்பிட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: 'புதிய பாதை'யில் 'ஒத்த செருப்பு'டன் நடக்கும் பார்த்திபனுக்கு ஒரு அங்கீகாரம்!