தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

13 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்தை சந்தித்த பிரபல நடிகர் - அஜித் படப்பிடிப்பு

நடிகர் நவ்தீப் 13 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்தை நேரில் சந்தித்த புகைப்படத்தைத் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

அஜித்
அஜித்

By

Published : Sep 14, 2021, 2:57 PM IST

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள, வலிமை படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்து முடிந்த நிலையில், படக்குழுவினர் சென்னை திரும்பினர்.

ஆனால், அஜித் சென்னை திரும்பாமல், அங்கிருந்து ஹைதராபாத்தில் நடைபெற்ற BMW கண்காட்சிக்குச் சென்றார். அங்கு, அவருடன் ரசிகர்கள் பலரும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

அந்த வரிசையில் நடிகர் நவ்தீப், தல அஜித்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், "தூய அன்பு கொண்ட நபர் அஜித். அவர் ஹாய் என்று சொன்னது, நாம் சந்தித்துப் பல வருடங்கள் ஆகிவிட்டதா? என எனக்குள் கேள்வியை எழுப்பியது. அஜித் உண்மையிலேயே ஒரு அற்புதமான மனிதர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ஏகன் படத்தில் அஜித்தும், நவ்தீப்பும் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details