'நான் ஈ' படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் நானி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துவருகிறார். இதற்கிடையில் நேற்று இவரது 25ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதையடுத்து தற்போது டக் ஜெகதீஷ் என்று பெயரிட்டுள்ள தெலுங்கு படத்தில் நடிகர் நானி கமிட்டாகியுள்ளர். சிவா நிர்வாணா இயக்கி வரும் இப்படத்தில் ரிட்டு வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த நிலையில் இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. அதில் நானி, படத்தின் இயக்குநர் சிவா, தயாரிப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.