தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு அறுவை சிகிச்சை! - தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா

பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு தோள்பட்டையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Balakrishna
Balakrishna

By

Published : Nov 3, 2021, 2:16 PM IST

தெலுங்கில் முன்னணி நடிகரான நந்தமுரி பாலகிருஷ்ணா 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவரை ரசிகர்கள் 'பாலயா' என அன்புடன் அழைத்து வருகின்றனர்.

பாலகிருஷ்ணா தற்போது போயபதி சீனு இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் அகண்டா படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், பாலகிருஷ்ணா நவம்பர் 1ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த ஆறுமாதமாக பாலகிருஷ்ணாவுக்கு இடது தோள் பட்டையில் வலி இருந்து வருவதாகவும் அது இப்போது அதிகரித்தால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

இதையடுத்து நேற்று (நவம்பர் 2) பாலகிருஷ்ணாவுக்கு இடது தோள்பட்டையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நான்கு மணிநேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சைக்கு பின் பாலகிருஷ்ணா நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விரைவில் பாலகிருஷ்ணா வீடு திரும்புவார் எனவும் தெரிவித்தனர். பாலகிருஷ்ணா விரைவில் குணமடைய திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் சமூகவலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நந்தமுரி பாலகிருஷ்ணாவின் புது லுக்! வைரல் புகைப்படம்

ABOUT THE AUTHOR

...view details