போடா போடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். போடா போடிக்கு பிறகு இயக்குநர் பாலா இயக்கத்தில் 'தாரை தப்பட்டை' படத்தில் நடித்தார். இப்படத்தில் இவரது நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து, கன்னடம், மலையாள மொழிப்படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் வரலட்சுமி சரத்குமார், கதாநாயகி வேடங்கள் மட்டும் அல்லாமல் கதைக்காக எந்த வேடம் கிடைத்தாலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
அக்கட தேசத்தில் நீலாம்பரியாக மாறும் வரலட்சுமி சரத்குமார்! - acting aginst role
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகை வரலட்சுமி சரத்குமார், தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவை எதிர்த்து சண்டை போட இருக்கிறார்.
விஜய் நடிப்பில் வெளியான 'சர்கார்' படத்தில் புத்திசாலியான வில்லி வேடத்தில் நடித்து விஜய்யை மிரட்டினார். சர்கார் படத்தில் அவர் வந்த நிமிடம் குறைவு என்றாலும் விஜயை எதிர்த்து தில்லான நடிப்பில் ரசிகர்களை கவர்ந்தார். இப்படத்தில் இவரது நடிப்பு அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நாயகனாக நடிக்கும் படத்தில் வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்க இருக்கிறார்.
இப்படத்தில், படையப்பா பட பாணியில் ரஜினியை எதிர்த்து நின்ற நீலாம்பரி கதாப்பாத்திரம்போல் வரலட்சுமி சரத்குமாருக்கு வெயிட்டான கதாப்பாத்திரம் என்று கூறப்படுகிறது. வரலட்சுமி சரத்குமார் ஏற்கனவே நீயா-2, காட்டேரி, வெல்வெட் நகரம், ராஜபார்வை, கன்னிராசி, டேனி, கன்னீத்தீவு உள்ளிட்ட படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.