தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி, இன்று காமெடி உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துவரும் மன்சூர் அலிகான் இதுவரை சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். படங்களில் நடிப்பது மட்டுமின்றி ஒரு சில படங்களை இயக்கியும், தயாரித்தும் உள்ளார்.
நாம் தமிழர் கட்சியில் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த இவர், தமிழ் தேசிய புலிகள் என்ற புதிய கட்சியை தொடங்கினார். இவர் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.