தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

திருமணம் செய்து கொள்ளுங்கள் ப்ளீஸ்...ரசிகைக்கு மாதவன் தந்த இன்ப அதிர்ச்சி

உங்களது புகைப்படத்தை பார்த்து உருகிப் போயுள்ளேன். தயவுசெய்து என்ன திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று கேட்ட ரசிகைக்கு, மனைவியிடம் பேசிவிட்டு சொல்லட்டுமா என்று ஷாக் அளித்துள்ளார்.

நடிகர் மாதவன்

By

Published : Sep 20, 2019, 3:38 PM IST

Updated : Sep 20, 2019, 6:45 PM IST

சென்னை: திருமணம் செய்யுமாறு கேட்டுக்கொண்ட ரசிகைக்கு நடிகர் மாதவன் இன்ப அதிர்ச்சி தரும் விதமாக பதிலளித்துள்ளார்.

90ஸ் கிட்ஸ்களின் சாக்லெட் பாயாக திகழ்ந்து வருகிறவர் மாதவன். பெண் ரசிகைகள் இவர் மீது வைத்திருக்கும் கிரேஸ் தற்போதும் குறையாமல் உள்ளது.

கடைசியாக தமிழில் விஜய்சேதுபதியுடன் இணைந்து 'விக்ரம் வேதா' படத்தில் நடித்தார். இதைத்தொடர்ந்து 'மகளிர் மட்டும்' படத்தில் சிறப்பு வேடத்தில் தோன்றினார்.

இந்த நிலையில், பெண் ரசிகை ஒருவர் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மாதவனிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கு அவர் அந்த ரசிகைக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக பதிலளித்துள்ளார்.

திருமணம் செய்யுமாறு கேட்ட ரசிகைக்கு மாதவன் பதில்

இதுதொடர்பாக ட்வீட்டரில் கேள்வி கேட்டுள்ள ரசிகை, முதலில் நீங்கள் ட்வீட்டரில் இருக்கிறீர்கள் என்பது எனக்கு தெரியாது. இரண்டாவதாக, என்னை தயவு செய்து திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்களது முகப்பு புகைப்படம் பார்த்து உருகிப்போயுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள மாதவன், மிக்க நன்றி. என் மனதை தொட்டுவிட்டீர்கள். உடனடியாக என் மனைவியிடம் பேசிவிட்டு பதிலளிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைக் கண்ட ரசிகர்கள் மாதவனுக்கு வீட்டில் காத்திருக்கிறது அதிர்ச்சி என்றும், ரசிகர்களின் மனம் கோணாதவாறு பதில் அளிப்பதில் வல்லவராக இருக்கிறார் என்றும் பலர் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Last Updated : Sep 20, 2019, 6:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details