ஜிகிர்ந்தண்டா, சூதுகவ்வும் ஆகிய படங்களின் நடித்த காமெடி நடிகர் கருணாகரன் கொலை மிரட்டல் விடுவதாகக் கூறி 'பொதுநலன் கருதி' படத்தின் இயக்குனரும் இணை தயாரிப்பாளரும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாதிக்கப்பட்டவர்கள், "பொதுநலன் கருதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் கருணாகரன். இந்தப் படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட தொகை ரூ.25 லட்சம் ரூபாயை சரியாக வழங்கிய போதும் படத்தின் எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கருணாகரன் கலந்துகொள்ளவில்லை, இதனை படத்தின் அறிமுக நிகழ்ச்சியிலேயே படத்தின் இயக்குனர் குறிப்பிட்டார்.
நடிகர் கருணாகரன் மீது கொலை மிரட்டல் புகார் - கொலை மிரட்டல்
நடிகர் கருணாகரன் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 'பொதுநலன் கருதி' திரைப்படத்தின் இயக்குனரும் இணை தயாரிப்பாளரும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனை மனதில் வைத்துக்கொண்டு கருணாகரனின் அடியாட்கள் சிலர் இயக்குனருக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும். மேலும் இப்படத்தின் இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்தை கருணாகரன் தொலைபேசி முலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளாதாக கூறப்படுகிறது. இதைத்தவிர தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரின் தொலைபேசி நம்பரையும் அவர் கேட்டுள்ளார். படம் கந்துவட்டி கும்பலைப் பற்றி உள்ளதால் அவருக்கும் கந்துவட்டி மக்களுக்கும் சம்பந்தம் உள்ளது என்று கருணாகரன் மிரட்டியதாகவும் அவர்கள் கூறினர்.
இதனால் கந்துவட்டி மாபியாக்கள் மற்றும் கருணாகரனிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என புகார் அளித்துள்ளதாக பாதிக்கப்பட்டோர் தெரிவித்தனர்.