சாத்தான்குளத்தில் ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டிருந்த அறிக்கையில், 'காவல் துறையினரின் லாக்கப் அத்துமீறல் காவல் துறையின் மாண்பைக் குறைக்கும் செயல். இது ஏதோ ஒரு இடத்தில் தவறுதலாக நடந்த சம்பவம் எனக் கடந்து செல்ல முடியாது' என்று குறிப்பிட்டிருந்தார்.
'சாத்தான்குளம் சம்பவம் நம் நினைவுகளில் நீண்டநாள்கள் ஆக்கிரமித்திருக்கும்' - நடிகர் கார்த்தி - சாத்தன்குளம் சம்பவம்
சென்னை: ஜெயராஜ் குடும்பத்தினருக்கு ஏற்பட்டிருக்கும் வலியும் அதிர்ச்சியும் நமது நினைவுகளை நீண்ட நாள்கள் ஆக்கிரமித்திருக்கும் என நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.
கார்த்திக்
இவரின் இந்த அறிக்கையை ரீ-ட்வீட் செய்த நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், 'இந்த வலி மிகுந்த சம்பவமும், ஜெயராஜ் குடும்பத்திற்கு அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியும் நமது நினைவுகளை நீண்ட நாள்கள் ஆக்கிரமித்திருக்கும். இது ஒரு சில தனிப்பட்டவர்களின் தவறா அல்லது ஒட்டு மொத்த அமைப்பின் தவறா என்பது இந்த வழக்கு எப்படி கையாளப்படுகிறது என்பதன் மூலம் தெரிந்துவிடும்' எனப் பதிவிட்டுள்ளார்.