தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

’இளவரசே...அதற்குள் விடைபெற முடியாது...’ - வந்தியத்தேவனாக மாறி கார்த்தி ட்வீட்! - பொன்னியின் செல்வன்

’பொன்னியின் செல்வன்’ படம் குறித்து ஜெயம் ரவி பகிர்ந்த ட்வீட்டுக்கு, வந்தியத்தேவன் பாணியில் கார்த்தி பதில் அளித்துள்ளது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்

By

Published : Aug 26, 2021, 8:01 AM IST

Updated : Aug 26, 2021, 10:04 AM IST

கோலிவுட்டில் எம்ஜிஆர் உள்பட பலரும் கல்கியின் நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக்க முயற்சித்தனர். ஆனால் அந்தக் கனவை தற்போது மணிரத்னம் சாத்தியமாக்கியுள்ளார்.

இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தை, லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில், சுந்தர சோழராக பிரகாஷ் ராஜ், நந்தினியாக ஐஸ்வர்யா ராய், ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

விடைபெற்ற அருள்மொழி வர்மர்...

இந்நிலையில் இப்படத்தில் அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடித்துவரும் ஜெயம் ரவி தனது காட்சிகளின் படப்பிடிப்பை முடித்துள்ளார். இது குறித்து முன்னதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

வந்தியத்தேவன் பதில் ட்வீட்!

இதற்கு வந்தியத் தேவனாக அப்படத்தில் நடித்துவரும் நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் சுவாரஸ்யமான வகையில் பதிலளித்தார். அதில், "இளவரசர் ஜெயம் ரவி. நீங்கள் அதற்குள் விடைபெற்றுக்கொள்ள முடியாது! நீங்கள் சோழ நாட்டிற்கு செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன.

இன்னும் ஆறு நாள்களில் வடக்கில் வேலைகளை முடித்துவிட்டு தென் மண்டலம் வந்தடைவோம் - வந்தியத்தேவன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

வந்தியத்தேவன் கதாபாத்திரம்

பொன்னியின் செல்வன் கதையின்படி, நாயகனான வாணர் குல இளவரசன் வந்தியத்தேவன் தனது கலகலப்பான பேச்சுக்கும், சாகசப் பயணத்துக்கும், வீரத்துக்கும் பெயர்போன கதாபாத்திரம் ஆகும்.

சுந்தர சோழரின் பிள்ளைகளான ஆதித்த கரிகாலனிடம் ரகசியச் செய்தி அடங்கிய ஓலையை பெற்றுக் கொண்டு அதனை குந்தவியிடம் கொண்டு சேர்ப்பது, தொடர்ந்து, பொன்னியின் செல்வர் / அருள்மொழி வர்மனிடம் செய்தி கொண்டு செல்வது எனத் தூது செல்லும் வந்தியத் தேவன் வாயிலாக இக்கதை விரியும்.

இந்நிலையில், கார்த்தி வந்தியத்தேவனாகவே மாறி ஜெயம் ரவியின் ட்வீட்டு பதில் அளித்தது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க:இணையத்தைக் கலக்கும் 'பொன்னியின் செல்வன் வடிவேலு மீம்ஸ்'

Last Updated : Aug 26, 2021, 10:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details